உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தெரு நாய்களுக்கு 22 ஆண்டுகளாக உணவு வழங்கும் ராணுவ ஸ்டெனோகிராபர் சொந்த ஊருக்கு செல்வதால் சோகம்

தெரு நாய்களுக்கு 22 ஆண்டுகளாக உணவு வழங்கும் ராணுவ ஸ்டெனோகிராபர் சொந்த ஊருக்கு செல்வதால் சோகம்

குன்னுார்:குன்னுாரில் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு, ஓய்வு பெற்ற ராணுவ பெண் ஸ்டெனோகிராபர், 22 ஆண்டுகளாக காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்கி வருகிறார்.குன்னுார் பேரக்ஸ் ராணுவ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நயனா,60. எம்.ஆர்.சி.,யில் 'ஸ்டெனோகிராபராக' பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தெரு நாய்கள் மீது பாசம் கொண்ட இவர், சாலைகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை தேடி சென்று, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இறைச்சி, பிஸ்கட். பால் என பல உணவுகளை வழங்கி வருகிறார். இவர் வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நாய்கள் துள்ளி குதித்து வந்து உணவுகளை உட்கொள்கின்றன.நயனா கூறுகையில், ''கடந்த, 22 ஆண்டுகளாக சம்பளத்தின் ஒரு பகுதியை நாய்களுக்கு செலவு செய்து வந்தது மனதுக்கு நிறைவாக உள்ளது. பணி ஓய்வு பெற்றதால், 2 மாதங்களில் சொந்த ஊரான கேரளாவுக்கு செல்ல வேண்டி உள்ளது. பல ஆண்டுகள் பழகிய தெரு நாய்களை விட்டு பிரிவது கவலை அளிப்பதாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சமீர்
ஆக 10, 2024 09:53

அங்கேயும் உணவளிக்கலாம். இந்தியாவில் தெருநாய்களுக்கா பஞ்சம்?


Pandiarajan Thangaraj
ஆக 10, 2024 08:47

அனைத்து நாய்களையும் கூடவே அழைத்துச் செல்லவும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ