உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மசினகுடியில் சாய் லிங்குசாமி சர்வ ஜீவ சேவா மையம்

மசினகுடியில் சாய் லிங்குசாமி சர்வ ஜீவ சேவா மையம்

கூடலுார், : மசினகுடியில், ஸ்ரீ சாய் லிங்குசாமி சர்வ ஜீவ சேவா மையம் துவங்கப்பட்டது.மசினகுடியில், ஸ்ரீ சாய் லிங்குசாமி சர்வ ஜீவ சேவா மையம், துவக்க விழா நடந்தது. தொடர்ந்து, சத்தியநாராயண பூஜையும்; சாய் நிவாஸ் பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து, சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அவர்களின் தெய்வீக சொற்பொழி; தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சாய் சத்து மாவு; கர்ப்பிணி பெண்கள் சேவை நலத்திட்டத்தின் கீழ் இலவச ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. மாலையில், வஸ்திர சேவையும், தொடர்ந்து மகா மங்கள ஆரத்தி, தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதன்பின், ஜி.ஆர்.ஜி., கிருஷ்ணம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி இல்லத்தில், சாய் நிவாஸ் பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:30 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை