உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் பிளாஸ்டிக் கழிவு பறிமுதல்

மாநில எல்லையில் பிளாஸ்டிக் கழிவு பறிமுதல்

பந்தலுார், : கோடை சீசன் நிலவி வரும் நிலையில், மாநில எல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' கழிவுகளை பறிமுதல் செய்யும் பணி நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் மற்றும் அதற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தமிழக எல்லைக்குள் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் அதிக அளவில் எடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த, தமிழக - கேரளா எல்லையான பாட்டவயல் சோதனை சாவடியில், வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த போதும், முழுமையாக இதனை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் நெலாக்கோட்டை வனச்சரக, வனத்துறையினர், கேரளா மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்கின்றனர். அதில், 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை பறிமுதல் செய்து, அவற்றை எடுத்து வரும் வாகன டிரைவரின் பெயர் மற்றும் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்படும் 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் அதே பகுதியில், பொதுமக்கள் பார்வையில் படும்படி குவித்து வைத்துள்ளனர். பின்னர், அவை அனைத்து ஊராட்சி மூலம் கொண்டு செல்லப்பட்டு மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் நீலகிரிக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் கொண்டு செல்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை