உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கட்டாஞ்சி மலையில் ஆபத்தை அறியாமல் செல்பி எடுப்பது அதிகரிப்பு

கட்டாஞ்சி மலையில் ஆபத்தை அறியாமல் செல்பி எடுப்பது அதிகரிப்பு

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே கட்டாஞ்சி மலையில் ஆபத்தை அறியாமல் செல்பி, வீடியோ எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.காரமடை மருதூர் அருகே கட்டாஞ்சி மலை உள்ளது. கோவையின் குடிநீர் திட்டங்களுக்கு பில்லூர் அணையில் இருந்து வரும் ராட்சஷ குழாய்கள், இந்த மலையை குடைந்து, சுரங்கம் அமைத்து போடப்பட்டுள்ளது.கட்டாஞ்சி மலையின் உச்சியில், தண்டிகை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கோவையில் இருந்து வருவோர் பெரியநாயக்கன்பாளையம் வழியாக கட்டாஞ்சி மலைப்பாதை சாலை வழியாக வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், வனபத்திரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மஞ்சூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியும்.இயற்கை எழில் கொஞ்சும் கட்டாஞ்சி மலைப்பாதையில் பயணிப்போர், அதன் அழகை வாகனங்களை நிறுத்தி ரசித்து செல்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது. தற்போது இங்கு வருவோர் ஆபத்தான மலைப் பகுதிகள், பாறைகள் ஓரம் என ஆபத்தான பகுதிகளுக்கு சென்று செல்பி எடுக்கின்றனர்.சிலர் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிடுகின்றனர். இதே போல் இந்த மலைப்பகுதியில் உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கட்டாஞ்சி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஆபத்தை அறியாமல் செல்பி எடுப்போரிடமும், உடற்பயிற்சி செய்வோரிடமும் வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்டாஞ்சி மலை அடிவார பகுதியை சுற்றிலும் 90 சதவீதம் விவசாயம் தான் நடக்கிறது. வீடுகள், கட்டடங்கள் தொலைவில் தான் உள்ளது. இதனால் ஆட்கள் நடமாட்டம் குறைவு. யானை, காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளது. இங்கு வருவோர் கவனமுடன் இருக்க வேண்டும். பலரும் அலட்சியமாக பாறைகள் மீது ஏறி வீடியோ எடுக்கின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ