உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு: மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

குன்னுார்;குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரஸ்ட் டேல் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இங்கு குடிநீர் குழாய் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கால்வாயில் கழிவு நீரும் ஓடுகிறது சில இடங்களில் குழாய் பழுது ஏற்பட்டு விடுவதால், குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுஉள்ளதுஇது குறித்து மக்கள் கூறுகையில், 'இந்த குழாயில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் சமீபத்தில் முதியவர் ஒருவருக்கு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை