மேலும் செய்திகள்
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
11-Dec-2025
கடன் பெற்று தலைமறைவான நபருக்கு ஆறு மாதம் சிறை
11-Dec-2025
மேட்டுப்பாளையம் : மண்ணின் வளம் மற்றும் நலம் பாதுகாக்க, மண் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும் என, வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி அறிவித்துள்ளார். விவசாயத்திற்கு மண் அடிப்படை ஆதாரம். மண் பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பயிர்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன், மண்வளத்தை பொறுத்து அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்களது மண் வளம் பற்றி அறிந்து கொள்ள, தமிழக அரசு 'உழவன் செயலி' என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, செயலியில் தமிழ் மண் வளம் முகப்பு பகுதியில், தங்களது பெயர், கிராமம், வட்டாரம், சர்வே எண் ஆகிய விபரங்களை உள்ளீடு செய்து, தங்களது மண்ணின் சத்துக்களை அறிந்து கொள்ள, வழிவகை செய்துள்ளது. அதிகப்படியான உரங்கள் மண்ணில் இடுவதால், சத்துக்கள் பயிர்களுக்கு கிட்டாத நிலையில் சென்று விடுவதுடன், விவசாயிகளுக்கு உரத்திற்காக செலவிடும் தொகையும் அதிகமாகிறது. எனவே மண்ணின் வளம் அறிந்து, போதுமான அளவு உரம் இடுதல் அவசியமாகிறது. இவ்வாறு காரமடை வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி அறிவித்துள்ளார்.
11-Dec-2025
11-Dec-2025