உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை

பந்தலுார், : பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்பலபாடி கிராமம் அமைந்துள்ளது.இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தண்ணீர் குறைவாக உள்ளதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு குடிநீர் திறப்பதற்கு முறையாக ஆள் நியமிக்காத நிலையில், கடந்த, 5 நாட்களாக குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, காலி குடங்களுடன் சென்றனர். தகவலறிந்த தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., அசோக்குமார் ஆகியோர் வந்து, பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சற்குணசீலன், ஜோஸ் குட்டி ஆகியோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், 'குடிநீர் திறப்பதற்கு உள்ள தடையை நீக்கி, குடிநீர் கிணறு மற்றும் தொட்டிகளை சுத்தப்படுத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ