மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
13 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் அருகே குடிசை வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.----பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பி.ஆர்.எப்., காலனி அமைந்துள்ளது. இங்கு அஜேஸ் என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். பட்டா நிலத்தில் குடியிருக்கும் இவருக்கு, மனைவி ரம்யா, யது கிருஷ்ணா, ஸ்ரேயா கிருஷ்ணா ஆகிய குழந்தைகள் உள்ளனர். ஏழை குடும்பமான இவர்களால் சொந்த வீடு கட்ட முடியாத நிலையில், முழுவதும் பிளாஸ்டிக் மூலம் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இங்கு மின் வசதி இல்லாததால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவர்கள் படிக்கும் அவலம் தொடர்கிறது. அரசு இலவச வீடு திட்டத்தில் பயன்பெற ஊராட்சியில் விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை பயன் ஏற்படவில்லை. அஜேஸ் கூறுகையில்,''வீடு கட்ட எங்களுக்கு எவ்வித வசதி வருமானம் இல்லை. கூலி வேலை செய்து வருகிறேன். மின் வசதி இல்லாததால், குழந்தைகள் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதால், கண் எரிச்சல் ஏற்படுகிறது. என் குழந்தைகள் எதிர்காலம் கருதி, வீடு மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
13 hour(s) ago