உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதுார், மந்தை மாரியம்மன் கோவிலில் பன்னிரண்டாம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி மற்றும் அன்னை வேள்வி வழிபாடுடன் சுமங்கலி பூஜை துவங்கியது. 12:00 மணிக்கு அன்னைக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது. 12:00 மணிக்கு அலங்கார ஆராதனையும், பேரொளி வழிபாடும், சிறப்பு பூஜையும் நடந்தது. அர்ச்சகர்கள் நாராயணன், கண்ணன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாலி சரடு, வளையல் ஆகியவை பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை