உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாழ்வாக தொங்கிய மின்கம்பி அரசு பஸ்சில் உரசி டிரைவர் பலி

தாழ்வாக தொங்கிய மின்கம்பி அரசு பஸ்சில் உரசி டிரைவர் பலி

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு போக்கு வரத்துக் கழக பணிமனையில், தேனாடு, அவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப், 43, டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு கூட்டாடா கிராமத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் டவுன் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில், கண்டக்டர், நான்கு பயணியர் மட்டும் இருந்தனர்.கூட்டாடா சாலை சந்திப்பில், சமீபத்தில் பெய்த கனமழையால், உயர் அழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்து, மின்கம்பி தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளூர் மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும், அதை ஒழுங்குபடுத்தவில்லை. இந்நிலையில், பிரதாப் ஓட்டி வந்த பஸ் சாலையின் திருப்பத்தில், தாழ்வாக தொங்கிக் கொண்டு இருந்த மின்கம்பி மீது வலது புறத்தில் உரசியதில், தீப்பொறி ஏற்பட்டு, சத்தம் கேட்டது. உடனே பிரதாப் பஸ்சை நிறுத்தினார்.பயணியர் மற்றும் கண்டக்டர் அலறியடித்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். அப்போது, டிரைவர் சீட்டில் இருந்து பஸ்சின் வலது புறத்தில் கதவை திறந்து இறங்கிய பிரதாப் மீது மின்கம்பி பட்டதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருக்கு, சிந்துமேனகா என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மின்வாரியத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக, உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டினர்.இறந்த பிரதாப் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை