மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
21 hour(s) ago
அன்னுார்:ஒட்டர்பாளையம் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால் இல்லாத ஒட்டர் பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உறிஞ்சுகுழி அமைத்து ஒத்துழைக்க வேண்டும். உறிஞ்சு குழி அமைக்க 7000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.பலர் குப்பைகளை வீட்டுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்காமல் ஒட்டர் பாளையம் பிரிவில் சாலையோரத்தில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.'பொதுமக்கள் குப்பைகளை சாலை ஓரத்தில் வீசாமல், வீட்டுக்கு வரும் தூய்மை பணியாளரிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கி தூய்மை பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என ஒட்டர்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
21 hour(s) ago