மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
4 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
4 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
4 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
4 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் அருகே இல்லாத ஊர் பெயரில் சாலை அமைத்தும், பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால், பிற கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி மக்கள், பந்தலுார் அருகே அய்யன்கொல்லி; சன்னக்கொல்லி பகுதிகளுக்கு மறு குடியமர்வு செய்யப்பட்டனர். அப்பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சாலை, குடிநீர், மின்சாரம் என மக்களின் அடிப்படை தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குள்ள நெல்லியாம்பதி- -பென்னை மண் சாலையை சோளிங் சாலையாக மாற்ற, 23 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கடந்த, 2022 ஆம் ஆண்டு இங்கு சாலை பணியும் நடந்தது. ஆனால், இந்த பகுதியில் பென்னை என்ற ஊர் ஏதும் இல்லை. 'அதிகாரிகள் எதன் அடிப்படையில் பென்னை பகுதிக்கு சாலை அமைத்தனர்,' என மக்கள் குழப்பமடைந்தனர். மறுபுறம், அந்த சாலை சீரமைப்பு பணியும் பாதியில் விடப்பட்டுள்ளது.தற்போது, அங்குள்ள சோளிங்கற்கள் முழுமையாக பெயர்ந்து, நடந்து செல்லவும் முடியாமல் வாகனங்களும் போக முடியாத சூழ்நிலை உள்ளதால், மறு குடியமர்வு செய்யப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு, இந்த சாலை பணியை முழுமைப்படுத்த வேண்டும்; இல்லாத ஊருக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த குழு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago