உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொட்டி இடிந்து விழுந்து தாயும், மகனும் பலி

தொட்டி இடிந்து விழுந்து தாயும், மகனும் பலி

பாலக்காடு;பாலக்காடு அருகே, நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து, தாயும், மகனும் இறந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், செர்ப்புளச்சேரி அருகே உள்ள வெள்ளிநேழி பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். இவரது, மாட்டு பண்ணையில் மேற்குவங்கத்தை சேர்ந்த வசுதேவ், அவரது மனைவி ஷாமிலி, 30, ஆகியோர் இரண்டு வயது மகன் சாமிராம் உடன் வசித்தனர்.இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு மதிய உணவு சமைக்க தண்ணீர் எடுப்பதற்காக, நீர்தேக்க தொட்டி அருகே குழந்தையுடன் ஷாமிலி சென்றனர். அப்போது திடீரென அந்தத் தொட்டி இடிந்து விழுந்தது.தொட்டியின் இடிபாடுகளில், ஷாமிலியும், குழந்தையும் சிக்கிக் கொண்டனர். ஒரு ஒரு மணி நேரம் கழித்து பண்ணையில் இருந்து வந்த வசுதேவ், மனைவி, மகனை கண்டு, சப்தமிட்டார். அப்பகுதி மக்கள் இடிபாடுகளை நீக்கி இருவரின் உடல்களை மீட்டு ஒற்றைப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செர்ப்புளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை