உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏக்குணியில் தெவ்வப்பா திருவிழா திரளான பக்தர்கள் காணிக்கை

ஏக்குணியில் தெவ்வப்பா திருவிழா திரளான பக்தர்கள் காணிக்கை

ஊட்டி;ஊட்டி ஏக்குணி பகுதியில் அமைந்துள்ள கோவிலில், தெவ்வப்பா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரியோடைய்யா திருவிழா, ஆண்டுதோறும் ஜூலை மாதம் கொண்டாடப்படுகிறது.இவ்விழா, கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி, தாந்தநாடு, கேத்தி கெராடா உள்ளிட்ட கிராமங்களில் ஏற்கனவே நடந்து முடிந்தது. ஏராளமான படுக சமுதாய மக்கள் காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டனர்.இவ்விழாவின் ஒரு கட்டமாக, ஊட்டி அருகே, ஏக்குணி கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள 'பனகுடியில்' (வனக்கோவில்)விழா சிறப்பாக நடந்தது. அதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள், கலாச்சார உடையுடன் சிறப்பு பூஜையில் பங்கேற்று, காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டனர்.தொடர்ந்து, கொட்டும் மழையில் மாலை, 3:00 மணியளவில், 'ஹக்கபக்க' கோவிலில் 'ஹரிக்கட்டுதல்' எனப்படும் தானிய திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி