உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடுப்பு சுவரில் கார் மோதி சுற்றுலா பயணி பலி

தடுப்பு சுவரில் கார் மோதி சுற்றுலா பயணி பலி

ஊட்டி, ஜூலை 31--ஊட்டியில் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாபயணி பரிதாபமாக உயிரிழந்தார்.ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை சேர்ந்தவர் பூபதி,45. இவர் தனது நண்பர்களான பிரவீன்,35, உட்பட 7 பேருடன் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார்.கூடலுாரில் உறவினருக்கு சொந்தமான காட்டேஜில் தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.நேற்று உறவினரின் இன்னோவா காரை எடுத்து, ஊட்டிக்கு சுற்றுலா வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின், மீண்டும் கூடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் ஓட்டினார். காமராஜர் சாகர் அணை அருகே உள்ள பாலத்தை கடக்கும் போது வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. முன் இருக்கையில் அமர்ந்து பூபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். புது மந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். முதற் கட்ட விசாரணையில் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை