| ADDED : மே 04, 2024 11:41 PM
கோத்தகிரி;கோத்தகிரி அருகே குளவி கடித்ததில் சுற்றுலா பயணிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை சித்தாபுதூர் பகுதியில் இருந்து, மூன்று குடும்பங்களை சேர்ந்த, ஒன்பது பேர், நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இயற்கை காட்சிகளை கண்டு களித்த அவர்கள், கோத்தகிரி தாந்தநாடு பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். நேற்று மாலை, அவர்கள் அனைவரும் கோத்தகிரி ஹாடாதொரை பகுதிக்கு சென்று, அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு களித்துள்ளனர். அப்போது மழை பெய்த நிலையில் கூட்டில் இருந்து வெளியேறிய குளவிகள் அவர்களை கடித்துள்ளது. அலறி அடித்து ஓடியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், படுகாயம் அடைந்த ராஜசேகர், 56, கார்த்திகேயன், 54, இருவரும் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.