உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலத்தில் சிக்கிய லாரியால் சிக்கல்

பாலத்தில் சிக்கிய லாரியால் சிக்கல்

ஊட்டி, : ஊட்டியில் பாலத்தில் சிக்கிய கான்கிரீட் கலவை லாரியால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து காந்தள் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ரயில்வே பாலம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை படகு இல்ல பகுதியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி, 'கான்கிரீட்' கலவை லாரி வந்தது. ரயில்வே பாலத்திற்கு முன்பு வரும் போது அங்குள்ள உயர தடுப்பில் சிக்கி கொண்டது. இதனால், படகு இல்ல சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.காந்தள் செல்லும் அரசு பஸ்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு பாலத்தில் சிக்கிய கான்கிரீட் கலவை லாரி மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி