உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லாரி மோதி வீடு சேதம்; 4 பேர் உயிர் தப்பினர்

லாரி மோதி வீடு சேதம்; 4 பேர் உயிர் தப்பினர்

கூடலுார் : கூடலுார் ஆமைக்குளம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் வீடு சேதமடைந்தது.கூடலுாரை சேர்ந்த டிப்பர் லாரி கட்டுமான பொருள் எடுப்பதற்காக நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கேரளா நோக்கி சென்றது. கோழிக்கோடு சாலை ஆமைக்குளம் அருகே, வளைவான பகுதியில் லாரி கட்டுப்பட்டை இழந்து, சுந்தரம் என்பவரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.அதில், வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. வீட்டிலிருந்த சுந்தரம் மற்றும் மனைவி, இரு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதமடைந்த வீட்டை லாரியின் உரிமையாளர், சீரமைத்து தருவதாக கூறி பணிகளை மேற்கொண்டனர். இதனால், போலீசில் புகார் எதும் தரப்படவில்லை.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, ஆமைக்குளம் அருகே வளைவான சாலையை அகலப்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை