| ADDED : ஆக 23, 2024 02:37 AM
கோத்தகிரி;கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மலை காய்கறி விவசாயம் நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி நடக்கிறது. நடப்பாண்டு, பருவமழை தொடர்ந்து பெய்தாலும், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோத்தகிரி ஈளாடா, நெடுகுளா மற்றும் கூக்கல்தொறை உள்ளிட்ட பகுதிகளில், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலை காய்கறி விளைவிக்கப்படுகிறது.தடை இல்லாமல் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே, பயிர்கள் செழித்து வளரும் என்பதால், கூடுமானவரை விவசாயிகள் ஓட்டைகளை மறித்து, அங்கு சேகரமாகும் தண்ணீரை பாய்ச்சுகின்றனர்.பெரும்பாலான விவசாயிகள், தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த சொட்டுநீர் பாசனத்துடன், சிறிய 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர் வீணாகாதவாறு பயிர்களுக்கு பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.