உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை வந்தால் வடியாத வெள்ளம்: வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

மழை வந்தால் வடியாத வெள்ளம்: வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

ஊட்டி;ஊட்டி பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்புற பகுதிகளில் மழை வந்தால் வெள்ளம் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊட்டியில் கடந்தாண்டு பருவ மழை பொய்த்தது. நடபாண்டில் ஏப்., இறுதி வரை மழை பொழிவு இல்லை. கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஊட்டியில் கன மழை பெய்தது. பஸ் ஸ்டாண்டிலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியது. அதில், ரயில்வே மேம்பாலம் கீழ்புறம் மழை நீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வடியாமல், அடிக்கடி கழிவு நீருடன் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றன. அதே போல, மின்வாரிய அலுவலகம் முன்பும், ரவுண்டானா பகுதியில் மழையின் போது, அடிக்கடி கழிவு நீர் தேக்கம் ஏற்படுகிறது. எனவே, இந்த இரு பகுதிகளிலும் மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய வடிகால் அமைப்புகளை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி