| ADDED : ஆக 12, 2024 02:18 AM
ஊட்டி:'ஊட்டியில் சேதமான அண்ணாநகர் சாலையை சீரமைக்க விரைவில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஊட்டி அருகே, பழைய பைக்காரா சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள, 3 கி.மீ., துாரம் சாலை, கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது. மழை சமயத்தில் சேறும், சகதியாக காட்சியளிப்பதால் மக்கள் நடமாட முடியவில்லை. சாலை மோசமானதால் தனியார் வாகன ஓட்டுனர்களும் கிராமத்திற்கு வர அச்சப்படுகின்றனர்.இதனால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு செல்ல முடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.எனவே, இப்பகுதியை விரைவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.