உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குரு பெயர்ச்சி வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு

குரு பெயர்ச்சி வழிபாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி : ஊட்டி காந்தள் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருமடம், காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி வழிபாட்டு விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று முன்தினம்காலை, 8:30 மணிக்கு, மூத்த பிள்ளையார் வழிபாடு, 12:00 மணிக்கு, கலச ஸ்தாபன பெரு வேள்வி, மகா யாகம் பூர்ணாஹுதி, திருமஞ்சன அபிஷேகம், பேரொளி வெளிப்பாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு அன்னதானமும், மாலை, 5:30 மணிக்கு, அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் பெருமாள் திருவீதி உலா நடந்தது.நேற்று மாலை, அருள்மிகு குருபகவான் மேச ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு செல்லும் வழிபாடுகள் பல கோவில்களில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, தட்சிணாமூர்த்தி திருமடத்திற்கு உட்பட்ட, அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனமர், காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி வழிபாடு நடந்தது. தவத்திரு மருதாசல அடிகளார் முன்னிலையில், மாலை, 4:00 மணிக்கு பெருவேள்வி துவங்கி, 5:19 மணிக்கு, குரு பெயர்ச்சி நடந்தது. தொடர்ந்து அஷ்டமி பூஜை இடம் பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை