ஊட்டி:நீலகிரியில் ஐ.டி.ஐ., பயில, வரும் ஏழாம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில், 2024ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு வரும், 7ம் தேதி வரை, 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் www.skiltraining.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு, 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னுார் ஐ.டி.ஐ., யில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துனர் (பிட்டர்), குளிர் பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்துதல் தொழில்நுட்பம், கம்மியர் மோட்டார் வண்டி, மின்சார பணியாளர், கம்மியர் மின்னணுவியல், மேம்பட்ட சி.என்.சி., எந்திர தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் கம்மியர் மின்சார வாகனம் ஆகிய இரண்டு ஆண்டுகள் தொழிற் பிரிவுகள் உள்ளன.மேலும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப தொழில் பிரிவுக்கும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்பியாள் இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவுக்கும், வெல்டர் ஒரு ஆண்டு தொழில் பிரிவுக்கும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். கூடலுாரிலும் சேரலாம்
பழங்குடியினருக்காக இயங்கும் கூடலுார் (உப்பட்டி) அரசு ஐ.டி.ஐ., நிலையத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, மேம்பட்ட சி.என்.சி., எந்திர தொழில்நுட்ப வல்லுனர், கம்மியர் மின்சார வாகனம் ஆகிய இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவுகள் உள்ளனதொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனர் ஓராண்டு தொழில் பிரிவுக்கும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்பியாள் இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவிற்கும், வெல்டர் மற்றும் பிளம்பர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு, குன்னுார் ஐ.டி.ஐ., -9499055707; உப்பட்டி ஐ.டி.ஐ., - 0426 - 2263449, 9499055707 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.