மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டியில் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஊட்டி புறநகர் பகுதியை சேர்ந்த, 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஊட்டி நகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த, 6ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மான்பூங்கா பகுதியில் சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உறவினர்கள் சம்பவ பகுதிக்கு வந்து அந்த பெண்ணை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஊட்டி பி-1 போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின், வழக்கு பதிவு செய்து சிலரை தேடி வந்தனர். இதற்காக, மொபைல் போன் சிக்னல் அடிப்படையில் இந்த பகுதியில் பதிவான மொபைல் போன் எண்களை கொண்டு விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தில், ஊட்டியை சேர்ந்த, 25 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.
03-Oct-2025