உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்டல வாலிபால் போட்டி ஜூட்ஸ் பள்ளி சாம்பியன்

மண்டல வாலிபால் போட்டி ஜூட்ஸ் பள்ளி சாம்பியன்

கோத்தகிரி;கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் மண்டல வாலிபால் போட்டி நடந்தது.இதன் இறுதி போட்டியில், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி அணியினர், 14 வயதுக்கு உட்பட்டோர் சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில், ஈஷா பள்ளி; ஜூனியர் ஆண்கள் பிரிவில், கே.எஸ்.ஐ.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளியை வென்றனர்.மேலும், 19 வயதுக்கு உட்பட்டோர் சீனியர் ஆண்கள் பிரிவில், ஈஷா பள்ளியையும், 19 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் சீனியர் பிரிவில் பொள்ளாச்சி திஷா பள்ளியையும் வீழ்த்தினர்.14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் சப்-ஜூனியர் பிரிவில், கோவை ஈஷா ஹோம் பள்ளி, கோவை பாரதி பள்ளியையும், 17 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில், ஜூட்ஸ் பள்ளியையும் வென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மாவட்ட நீதிபதி அப்துல் காதர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில், பள்ளி முதல்வர் சரோதன்ராஜ், இயக்குனர் சஞ்சித் தன்ராஜ், மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை