மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
3 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
3 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
3 hour(s) ago
கூடலூர்;நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும், பருவ மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பருவ மழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நவம்பரில் துவங்கியது. அதில், தானியங்கி கேமராக்கள் வாயிலாக புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் டிசம்பரில் 28 நாட்கள் நடந்தன. அதே டிச., மாதத்தில் 30 மற்றும் 31 தேதிகளில், அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து, ஜன., 28ல் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, முதுமலை உள்வட்டம் பகுதியில் இரண்டு நாட்கள் ஊர்வன கணக்கெடுப்பு பணிகள், நேற்று துவங்கியது. இப்பணியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா மேற்பார்வையில், வனச்சரகர்கள் மனோஜ்குமார், விஜய், கணேஷ், பாரத், வன ஊழியர்கள், துறை ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் உட்பட 136 பேர் ஈடுபட்டுள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago