உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மறியல் ; அரசு ஊழியர்கள் 82 பேர் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மறியல் ; அரசு ஊழியர்கள் 82 பேர் கைது

ஊட்டி;ஊட்டியில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 82 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ--ஜியோ' சார்பில், 2-வது கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.இதன் ஒரு பகுதியாக, ஊட்டி ஏ.டி.சி.,யில் அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் பரமேஸ்வரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர்கள் கூறுகையில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பிப்., 15ம் தேதி மாவட்ட அளவில் ஒருநாள் ஆயத்த போராட்டம் நடத்தப்படும். பிப்., 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்,'என்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை