மேலும் செய்திகள்
நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
12-Dec-2025
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
12-Dec-2025
நீலகிரியில் ரூ.7.27 கோடியில் நலத்திட்ட உதவிகள்
12-Dec-2025
சேதமடைந்த குழாய்: வீணாகும் குடிநீர்
12-Dec-2025
பந்தலுார் : பந்தலுார் அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா கிராமத்தில் நடந்து வந்த பெண்ணை சிறுத்தை துரத்தி வந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக, சிறுத்தை நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சத்தில் நடமாடி வருகின்றனர். கூண்டுகள் வைத்து, வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வரும் சிறுத்தை, பொதுமக்கள் கண்களில் மட்டும் அடிக்கடி தென்பட்டு வருகிறது. இந்நிலையில், அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா கிராமத்தை சேர்ந்த, மோகிலா,30, என்பவர் கேரளா மாநில மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதற்காக, வீட்டிலிருந்து பகல் நேரத்தில் சாலைக்கு நடந்து வந்துள்ளார்.அப்போது, சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை துரத்தி வந்தது. அவர் தப்பி ஓடிய போது கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பழங்குடியின ஆண்கள் வந்து, சப்தம் எழுப்பி சிறுத்தையை துரத்தி உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், அதிவிரைவு மீட்பு குழுவினர், உயர் அடுக்கு காவல் படையினர் இணைந்து, அந்தப் பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
12-Dec-2025
12-Dec-2025
12-Dec-2025
12-Dec-2025