உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தண்ணீர் எடுக்க சென்றவர் ஆற்றில் விழுந்து பலி

 தண்ணீர் எடுக்க சென்றவர் ஆற்றில் விழுந்து பலி

பந்தலுார்: பந்தலுார் அருகே மணல்வயல் பகுதியில் தண்ணீர் எடுக்க சென்றவர் ஆற்றில் தவறி விழுந்து பலியானார். பந்தலுார் அருகே மணல்வயல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்,33. இவர் இரு நாட்களுக்கு முன்பு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மீண்டும் மாலை வீட்டை ஒட்டிய ஆற்றின் கரைக்கு சென்றுள்ளார். தண்ணீர் எடுக்க, ஆற்றில் குனிந்த போது தலைசுற்றி விழுந்ததில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இவரை காணாத நிலையில் உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். கூடலூர் தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் சென்று, தேடிப்பார்த்தபோது ஆற்று சுழலில் சிக்கி ராஜன் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், பந்தலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை