உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலை நேரம் கிராமத்துக்கு வந்த காட்டு யானையால் பரபரப்பு

காலை நேரம் கிராமத்துக்கு வந்த காட்டு யானையால் பரபரப்பு

பந்தலுார்;பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக அலுவலகம் எதிரே சந்தக்குன்னு கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு அடிக்கடி ஒற்றை யானை வந்து செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இரவில் கிராமத்தை ஒட்டிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்திற்குள் வந்த யானை, தமிழக - கேரளா சாலையில் உலா வந்தது.யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிய நிலையில், சில நாட்கள், ஊருக்குள் தலை காட்டாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு திடீரென சந்தக்குன்னு, மாரியம்மன் கோவில் அருகே சாலையில் வந்து போஸ் கொடுத்தது.கிராமத்திற்கு மத்தியில் திடீரென யானை வந்து நின்றதால் மக்கள் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையை அங்கிருந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் துரத்தினர். தொடர்ந்து, வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை