மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
9 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
10 hour(s) ago
கூடலுார்:கூடலுார் மரப்பாலம் அருகே, விவசாய தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை, 150 நேந்திரன் வாழை மரங்களை சேதம் செய்தது.கூடலுார் பகுதியில், பனிப்பொழிவை தொடர்ந்து கோடை மழையும் ஏமாற்றி வருவதால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், தாவர உண்ணிகள் குறிப்பாக யானைகள் வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காமல், இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து உணவுக்காக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், குடியிருப்புகள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே உள்ள, அட்டி கொல்லி கிராமத்தில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நுழைந்த காட்டு யானை வேலாயுதம் என்பவரின் விவசாய தோட்டத்தில் நுழைந்தது. 150 நேந்திரன் வாழை மரங்களை சேதம் செய்தது. சப்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், யானையை அங்கிருந்து விரட்டினர். சேதமடைந்த வாழை மரங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில்,'குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை, வீடுகளை சேதப்படுத்தி மக்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்,' என்றனர்.
9 hour(s) ago
10 hour(s) ago