உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆரஞ்ச் குரோவ் சாலையில் விபத்து அபாயம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

 ஆரஞ்ச் குரோவ் சாலையில் விபத்து அபாயம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் சாலை தோண்டப்பட்டு சீரமைப்பு பணிகள் துவங்காததால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் ஆரஞ்ச் குரோவ் சாலை சீரமைப்பு பணிக்காக கடந்த வாரத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையில் இருந்த தார் கற்கள் பொக்லைன் உதவியுடன் சாலை முழுவதும் அகற்றப்பட்டது. எனினும், சீரமைப்பு பணிகள் துவங்காததால், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் முகம் சுளித்து செல்கின்றனர். மழை காரணமாக பணியை நிறுத்தி வைத்துள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துகள் நடக்கும் முன் சாலை சீரமைப்பு பணிகளை துவக்க வேண் டும். குன்னூர் சிம்ஸ் பார்க் முதல் ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை தோண்டப்பட்டு பணிகள் துவங்காததால், வாகனங்கள் ஒட்டி செல்ல சிரமம் ஏற்படுகிறது.குன்னூர் சிம்ஸ் பார்க் முதல் ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை தோண்டப்பட்டு பணிகள் துவங்காததால், வாகனங்கள் ஒட்டி செல்ல சிரமம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ