மேலும் செய்திகள்
போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலி அபராதம் விதித்தது ஆணையம்
2 hour(s) ago
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
11-Dec-2025
கடன் பெற்று தலைமறைவான நபருக்கு ஆறு மாதம் சிறை
11-Dec-2025
குன்னுார்: குன்னுார் உபதலை அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்து பேசுகையில்,''தேர்வு நேரத்தில் மொபைல் பேன், டி.வி.,யை முழுமையாக தவிக்க வேண்டும். தேர்வு காலத்தில் மாணவர்களின் படிப்பை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். உடல் நலனை நன்கு பராமரிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்,'' என்றார்.உபதலை சத்யசாய் மாருதி சேவா அறக்கட்டளை நிர்வாகி மேகநாதன் சாய் பேசுகையில், ''10 மற்றும் பிளஸ்-2 , பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க அறக்கட்டளை நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.விளையாட்டு போட்டிகளில் முதல் இரு இடங்கள் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பையும், கலை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இடைநிலை ஆசிரியர் சித்ரா தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் சரோஜா வரவேற்றார். தலைமையாசிரியர் ஐரின்ரெதி நன்றி கூறினார்.
2 hour(s) ago
11-Dec-2025
11-Dec-2025