மேலும் செய்திகள்
புதிய வன அலுவலர் கூடலுாரில் பொறுப்பேற்பு
8 hour(s) ago
ஒப்பந்த பணியாளர்கள் ஸ்டிரைக்: குப்பை தேக்கம்
8 hour(s) ago
குன்னுார்:குன்னுார் உபாசி அரங்கில் நாளை (22ம் தேதி) நடக்கும் அங்கக வேளாண்மை கருத்தரங்கில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குன்னுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உபாசி அரங்கில், 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு அங்கக வேளாண்மை கருத்தரங்கு நடக்கிறது. கருத்தரங்கில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.மேலும், முன்னோடி அங்கக வேளாண்மை சாகுபடியாளர்களின் அனுபவம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், அங்கக காட்சி பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago