உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்டியுடன் சாலையை கடக்கும் யானை; டிரைவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

குட்டியுடன் சாலையை கடக்கும் யானை; டிரைவர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கூடலுார் : கூடலுார் கோழிக்கோடு சாலையில், குட்டியுடன் காட்டு யானை சாலையை கடக்க முயன்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கூடலுார் பகுதியில் வறட்சியின் காரணமாக, காட்டு யானைகள் உணவு, குடிநீர் தேடி பசுமையான வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.இந்நிலையில், கூடலுார் குடோன் - நாடுகாணிக்கு இடையே, கோழிக்கோடு சாலையோரம் உள்ள பசுமையான வாகன பகுதியில், கடந்த சில நாட்களாக குட்டியுடன் யானை ஒன்று முகாமிட்டுள்ளது. வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.' யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால், அவ்வழியாக, வாகனங்களில் பயணிப்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும்,' வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு, சாலையை கடந்து செல்வதற்காக யானை குட்டியுடன், சாலையோரம் காத்திருந்தது. வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர்.திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் யானை காத்திருந்த பகுதியை கடந்த போது, யானை கோபமடைந்து முன்னால் வந்தது. அப்போது அவர்கள் வேகமாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். தொடர்ந்து யானை குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.வனத்துறையினர் கூறுகையில், 'குட்டியுடன் யானை சாலையை கடக்கும் போது, டிரைவர்கள் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, அவைகள் சாலையை கடக்கும் வரை காத்திருந்து பயணிக்க வேண்டும். அவைகள் சாலையை கடக்கும் போது இடையூறு ஏற்படுத்தினால் தாக்கும் ஆபத்து உள்ளது. அத்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை