உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

கூடலுார் ; கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள, முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவிலில், 9ம் ஆண்டு அன்னாபிஷேக திருவிழா மற்றும் பூஜைகள் நேற்று சிறப்பாக நடந்தது. காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல், 12:30 மணிக்கு லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று லிங்கேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, நந்தட்டி மாதேஸ்வரன் கோவில், நம்பாலக்கோட்டை சிவன்மலை சிவன் கோவில், ஊட்டி காந்தள் காசிவிஸ்வநாதர் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. பூஜைகளில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை