உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவங்காடு கைரளி அமைப்பின் ஓவியப்போட்டி: மாணவர்கள் ஆர்வம்

அருவங்காடு கைரளி அமைப்பின் ஓவியப்போட்டி: மாணவர்கள் ஆர்வம்

குன்னுார்; குன்னுார் அருவங்காடு பகுதியில், செயல்பட்டு வரும் கைரளி அருவங்காடு அமைப்பு சார்பில் நடந்த ஓவியப்போட்டியில், 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் செயல்பட்டு வரும், 'கைரளி அருவங்காடு' அமைப்பு சார்பில், 35வது ஆண்டு ஓணம் திருவிழா, 'கலசம் சர்கிர உற்சவம் 2025' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதில், நேற்று முன்தினம் கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி மற்றும் அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப்போட்டிகள் நடந்தன. இதற்கு, கைரளி தலைவர் நவீன் ஜேம்ஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோஜ் குமார், செயலாளர்ஆண்டனி கில்சன் லோபஸ் முன்னிலை வகித்தனர். அதில், ஊட்டி, குன்னுார் பகுதிகளை சேர்ந்த, 500 மாணவ,மாணவியர் பங்கேற்றனர். எல்.கே.ஜி., முதல் பிளஸ்-2 வரையில் 5 பிரிவுகளில், 'போர் மற்றும் அமைதி, போதை தடுப்பு' உட்பட பல்வேறு தலைப்புகளில் ஓவியங்களை மாணவ, மாணவியர் வரைந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. வரும், 16, 17 தேதிகளில் பாடல்கள், பேன்ஸி டிரஸ், தனி நடனம், கிளாசிக்கல் நடனம், நாட்டுப்புற நடனம் மற்றும் வாத்திய இசை உட்பட கலை போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை, துணை செயலாளர்கள் மோகனன், அனீஷ், பிரமோத், பொருளாளர் நியாஸ் மற்றும் கைரளி மகளிர் அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை