மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
13 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
13 hour(s) ago
ஊட்டி;ஊட்டியில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், எல்லை துாரத்தை அதிகரிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி பகுதியில், 1,800 ஆட்டோக்கள் இயங்குகின்றன. அந்தந்த ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து இதுவரை, 15 கி.மீ., துாரத்திற்கு மட்டுமே, ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதனால், ஆட்டோ டிரைவர்களுக்கு போதிய சவாரி கிடைக்காமல் உள்ளதாக, டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், 'மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அதில், 'ஆட்டோ இயக்கத்தை, 15 கி.மீ., தொலைவை, 30 கி.மீ., அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்; தேவையான ஆட்டோ நிறுத்தம் ஏற்படுத்தவேண்டும்; பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்; இல்லாதப்பட்சத்தில், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்' என, வலியுறுத்தப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago