உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் விழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் விழா: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொரை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 41வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி தமிழ் ஆசிரியை இசக்கி ராணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. கலை திருவிழாவில் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்த மாணவன் யோகேஷ், 'கீ போர்டு' வாசித்தது அனைவரது கவனத்தை ஈர்த்தது.பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியளவில், முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்க நாணயம் மற்றும் ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கூக்கல்தொரை கனரா வங்கி கிளை சார்பில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கு, 22 ஆயிரத்து, 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி பி.டி.ஏ., தலைவர்கள் டட்லி மற்றும் காமராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கவிதா மற்றும் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ரவிக்குமார், முனீஸ்வரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி வரலாறு ஆசிரியை மஞ்சு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை