உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூபதியூர் நடைபாதை பிரச்னை; ஆய்வு முடிந்தும் தீர்வு இல்லை

பூபதியூர் நடைபாதை பிரச்னை; ஆய்வு முடிந்தும் தீர்வு இல்லை

ஊட்டி:'கோத்தகிரி பூபதியூர் பாதை பிரச்னையை விரைந்து முடிக்க வேண்டும்,' என, மனு அளிக்கப்பட்டது. பூபதியூர் ஊர் தலைவர் மாகாளி தலைமையில், ஊர்மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு:கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட, பூபதியூர் முதல் வார்டில் பல ஆண்டுகளாக, நடைபாதை பிரச்னை இருந்து வருகிறது. இதனால், பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு இடையே, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னுாரில் பணியாற்றி முன்னாள் கோட்டாட்சியர் பூஷண்குமார் உட்பட அதிகாரிகள், நேரில் களஆய்வு செய்து, நில எடுப்பு செய்து, பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். பிரச்னை முடிவடையும் தருவாயில், அரசு அலுவலர் பணி மாறுதல் செய்யப்பட்டதால், பாதை அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது. தற்போது, அதன் தொடர்ச்சியான வேலைகளை துவக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணை; ஆய்வு என காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்