உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கார் மோதி சாய்ந்த மின்கம்பம்

 கார் மோதி சாய்ந்த மின்கம்பம்

பந்தலுார்: பந்தலுார் அருகே இந்திரா நகர் பகுதியில் மின்கம்பம் மீது கார் மோதியதால் பாதிப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோய்,50. இவர் பந்தலுார் அருகே குந்தலாடி பகுதியில், ஒப்பந்த முறையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பணியை பார்வையிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில், இந்திரா நகர் அருகே வந்தபோது, சாலையோர மின்கம்பம் மீது காரை இடித்துள்ளார். அதில், மின்கம்பம் சாய்ந்ததுடன், காரின் முன்பக்கம் சேதம் ஏற்பட்டது. காரை ஓட்டிய ஜோய் காயங்கள் இன்றி தப்பினார். இது குறித்து தேவாலா போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பம் சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி