மேலும் செய்திகள்
தொடர் கனமழையால் 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்
24-Oct-2025
ஊட்டி: மழையில் கேரட் சாகுபடி நீரில் மூழ்கி வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஊட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு கேத்தி பாலாடா, எம்.பாலாடா, மணலாடா, கல்லக்கொரை ஹாடா, கொல்லிமலை ஓரநள்ளி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கேரட் பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மழை தொடர்ந்து பெய்ததால் நிலத்தில் இருந்து தண்ணீர் வடியவில்லை. கேரட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியதால் அதை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்தனர். ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லை. வெயில் அடித்ததை காண முடிந்தது. வெயில் அடிக்க தொடங்கி விட்டதால் கேரட் பயிரை மூழ்கடித்த மழைநீர் வற்ற தொடங்கியது. சில பகுதிகளில் அதிக மழை காரணமாக கேரட் அழுகியதால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விட்டுள்ளனர். இதன் காரணமாக ஊட்டி மார்க்கெட் உட்பட வெளி மாநிலங்களுக்கு குறைந்தளவிலான கேரட் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் மலை காய்கறிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். தோட்டக்கலை துறை ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
24-Oct-2025