மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
6 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
7 hour(s) ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் தேசிய மனித மேம்பாட்டு மைய தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது.பெரியநாயக்கன்பாளையத்தில் தேசிய மனித மேம்பாட்டு மையம் பல்வேறு சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேற்று உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, இம்மையத்தில் பயிற்சி பெற்று வரும் பெண்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியையொட்டி, அழிந்து வரும் சிட்டுக்குருவி மற்றும் பறவை இனங்களை பாதுகாப்பது குறித்த கலந்துரையாடல் நடந்தது. வருங்கால சந்ததிகள் இயற்கையோடும் வளமோடும் வாழ, இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது என, ஆலோசனை நடந்தது.'வருங்காலம் வளமாக இயற்கையை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது. சிறந்த பேச்சாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. முகாமில், பயிற்சியாளர்கள், ரோட்டரி சமுதாய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சரசு, இயக்குனர் சகாதேவன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
6 hour(s) ago
7 hour(s) ago