உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆட்டோ ஸ்டாண்டில் மோதல்: அமைதி பேச்சுவார்த்தை

ஆட்டோ ஸ்டாண்டில் மோதல்: அமைதி பேச்சுவார்த்தை

அன்னுார்;ஆட்டோ ஸ்டாண்டில், பா.ஜ., --- தி.மு.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நேற்று அமைதிப்பேச்சுவார்த்தை நடந்தது.அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. இங்கு அ.தி.மு.க., -- தி.மு.க., - பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் ஆட்டோ இயக்கி வருகின்றனர். பா.ஜ.,வை சேர்ந்த சிலர் தி.மு.க.,வுக்கு மாறினர். இதைத் தொடர்ந்து பா.ஜ.,வில் உள்ள சில ஆட்டோ டிரைவர்கள் அந்த ஸ்டாண்டில் தங்கள் ஆட்டோக்களை நிறுத்த, கடந்த 3ம் தேதி முயற்சித்தனர். இதற்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, அன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் நள்ளிரவு வரை பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.நேற்று, அன்னுார் தாலுகா அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் பங்கேற்றனர். தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், பொறியாளர் அணி அமைப்பாளர் நந்தகுமார் பங்கேற்றனர். பா.ஜ., சார்பில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், நிர்வாகிகள் விஜயகுமார், ரத்தினசாமி ஆகியோர் பங்கேற்றனர். தாசில்தார் நித்திலவள்ளி பேசுகையில், ''இருதரப்பினரும் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வாருங்கள். எழுத்துப்பூர்வமாக உங்கள் கோரிக்கைகளை எழுதிக் கொடுத்தால், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களது அறிவுரைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.பா.ஜ.,வினர், 'தங்கள் உறுப்பினர்கள் 12 பேர் ஆட்டோக்களை அங்கு நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தரப்பினர் 'ஏற்கனவே உள்ள 33 ஆட்டோகளுக்கே வாடகை சரியாக கிடைப்பதில்லை. எனவே புதிய ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது' என்றனர். இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் பேசலாம் என பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி