உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர் பனி பொழிவு அதிகரிப்பதால் பயணிகள் அவதி

 நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர் பனி பொழிவு அதிகரிப்பதால் பயணிகள் அவதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பனி பொழிவுடன், கடும் குளிர் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் சாரல் மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவியது. கடந்த, மூன்று நாட்களாக, மாவட்டத்தில் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரத்தில் பனிப் பொழிவு தொடருகிறது. இந்நிலையில், ஊட்டி தலைகுந்தா பகுதியில், நேற்று காலை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் குளிர் நிலவியதால், வாகன டிரைவர்கள், உள்ளூர் மக்கள் தீ மூட்டி குளிரை போக்கினர். இதேபோல, கோத்தகிரி தாழ்வான பதியான நெடுகுளா, குன்னுார் மற்றும் குந்தா பள்ளதாக்கு பகுதிகளிலும் நேற்று உறைப்பனி விழுந்தது.மாவட்டத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை, 9 டிகிரி செல்சியசாக இருந்தது. புல்வெளிகள், தேயிலை தோட்டங்களில் பனி விழுந்ததால், தேயிலை செடிகள் மற்றும் புல்வெளிகள் கருகி வருகின்றன. அதிகாலை நேரத்தில் பனியுடன், கடும் குளிர் நிலவியதால், ஐயப்ப பக்தர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தோட்டப்பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் வெம்மை ஆடைகளை அணிந்து செல்கின்றனர். ஊட்டியில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் காலை, மாலை நேரத்தில் குளிரால் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை