உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா கண்ணாடி மாளிகை மேற்கூரை சேதமடைந்து பாதிப்பு

பூங்கா கண்ணாடி மாளிகை மேற்கூரை சேதமடைந்து பாதிப்பு

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.சர்வதேச சுற்றுலா மையமான, ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு, கோடை விழா உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. பூங்காவுக்கு அழகு சேர்க்கும் விதமாக, இங்குள்ள பழமையான இத்தாலியன் பூங்கா கண்ணாடி மாளிகையில், கள்ளி செடிகள் உட்பட, பூவா தாவரங்கள் தொட்டிகளில் பராமரித்து பாதுக்காக்கப்படுகிறது.சிறப்பாக பராமரிக்கப்பட்ட இந்த பழமை வாய்ந்த கண்ணாடி மாளிகையில், கடந்த காலங்களில் சினிமா படப்பிடிப்புகளும் நடந் துள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக, போதிய பராமரிப்பு இல்லாமல், கண்ணாடி மாளிகையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து விழுந்து வருகின்றன. மேலும், மாளிகையின் முகப்பு மற்றும் பக்கவாட்டு வர்ணம் பூசாமல் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கண்ணாடி மாளிகை பூட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அரிய வகை தாவரங்களை கண்டுக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.எனவே, சுற்றுலாப்பயணிகள் மற்றும் தாவரவியல் மாணவர்கள் ஆய்வு செய்ய ஏதுவாக, பாரம்பரியமிக்க கண்ணாடி மாளிகையை புனரமைக்க, பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ