உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அம்மன் அலங்காரம்: பக்தர்கள் பரவசம்

அம்மன் அலங்காரம்: பக்தர்கள் பரவசம்

மஞ்சூர்:மஞ்சூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங் காரத்தில் அருள்பாலித்து வரும் அம்மனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர்.மஞ்சூர் பஜாரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காலை, மாலை நேரங்களில் தினசரி சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதேபோல், விசேஷ நாட்கள் பூஜையின் போது, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிேஷகங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவில் நிர்வாகம் தினசரி நடக்கும் பூஜையில் அம்மனை பல்வேறு தோற்றங்களில் அலங்கரித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சிப்படுத்தி வருவதை இங்கு பூஜை செய்ய வரும் பக்தர்கள் அம்மனின் காட்சியை கண்டு மன முருகி வேண்டி வருகின்றனர். கோவில் நிர்வாகம் கூறுகையில், மஞ்சூர் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து காலை நேர தினசரி பூஜையில் பங்கேற்க பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதால், பக்தர்களின் நலன் கருதி அம்மனை பல்வேறு தோற்றங்களில் சிறப்பு அலங்காரத்தில் காட்சிப்படுத்தி வருவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறோம்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை