உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராமர் பஜனை ஊர்வலம் வீடு, வீடாக சென்ற பக்தர்கள்

ராமர் பஜனை ஊர்வலம் வீடு, வீடாக சென்ற பக்தர்கள்

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியில், ராமர் பஜனை குழு சார்பில், ராமர் பஜனை ஊர்வலம் நடந்தது.சிவன் கோவிலில் மார்கழி முதல் தேதி முதல் விரதம் இருந்த பக்தர்கள், இரவில் ராமர் விளக்கு ஏற்றி ஒவ்வொரு வீடாக சென்று பஜனை பாடலை பாடி பூஜைகள் செய்து வந்தனர்.மார்கழி மாதம் நிறைவடைந்த நிலையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராமர் விளக்கு மற்றும் ராமர் திருவுருவப்படம் வைக்கப்பட்ட ரதம் ஆகியவற்றை, ஒவ்வொரு வீடாக எடுத்து சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் பக்தர்கள் ராமர் விளக்கு மற்றும் ரதத்திற்கு புனித நீர் தெளித்து சாமி கும்பிட்டனர்.பின்னர் பூஜைகள் செய்து கோவிலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் ராமர் சீதை குறித்த பாடல்களைப் பாடி பக்தியுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ராமர் பஜனை குழு தலைவர் சூரியகுமார், செயலாளர் அஜய், பொருளாளர் கிருஷ்ணராஜ் மற்றும் விழா குழு பொறுப்பாளர் ராஜா மற்றும் கமிட்டியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை