மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஜாமுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் டிராபிக் வார்டன் பணிகளுக்கான நேர்முக தேர்வு ஊட்டி, குன்னூர்,கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் காவல் நிலையங்களில் நடக்கிறது. இப்பணிக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. ஊட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வரும் 20ம் தேதி காலை 10.00 மணிக்கும், குன்னூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வரும் 21ம் தேதி காலை 11.00 மணிக்கும், கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வரும் 22ம் தேதி காலை 11.00 மணிக்கும், மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் வரும் 23ம் தேதி காலை 11.30 மணிக்கும், கூடலூர் போலீஸ் நிலையத்தில் வரும் 24ம் தேதி காலை 11.00 மணிக்கும் நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், அந்தந்த பகுதி இளைஞர்கள் கல்வி உட்பட பிற சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஜாமுதீன் கூறியுள்ளார்.
03-Oct-2025