உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகம் துவக்கம்

ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகம் துவக்கம்

மேட்டுப்பாளையம் : அனைத்து ரேஷன் கடைகளிலும், தமிழக அரசு அறிவித்த, பொங்கல் பொருட்கள் வழங்கும் பணிகள் துவங்கின.தமிழக அரசு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய், சர்க்கரை, பச்சரிசி, முழு கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து கோவை புறநகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோகம் துவங்கியது.பொங்கல் பண்டிகையை ஒட்டி, சூலூர் தாலுகாவில் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேற்று துவக்கி வைத்தார்.பொங்கல் தொகுப்பு மற்றும் வேஷ்டி, சேலையை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர், கவர்களில், ஆயிரம் ரூபாய் உள்ளதா என, ஒவ்வொரு முறையும் பார்த்து பயனாளிகளுக்கு வழங்கினார். பணம் இல்லாமல் வெறும் கவரை அமைச்சர் கொடுத்து சென்றுவிட்டார், என யாரும் சொல்லி விடக்கூடாது என்பதால், பணம் இருக்கிறதா என, பார்த்துக்கொடுக்கிறேன், என, அருகில் இருந்தவர்களிடம் சிரித்து கொண்டே கூறினார்.தொடர்ந்து, முதல்வரின் காப்பீடு திட்ட பதிவு முகாமை அமைச்சர் ஆய்வு செய்தார். கலெக்டர் கிராந்தி குமார், தாசில்தார் நித்திலவல்லி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கிட்டாம்பாளையத்தில் தலைவர் சந்திர சேகரும், அப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி தலைவர் சாந்தி ராஜேந்திரன் ஆகியோர் தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவில், 94 முழு நேர ரேஷன் கடைகளும், 22 பகுதி நேர ரேஷன் கடைகள் என, 116 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 72 ஆயிரத்து, 749 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்த, பணம் மற்றும் பொருட்கள் வழங்கும் பணிகள், துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி